ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

ஆஸி.க்கு எதிராக வென்ற தெ.ஆ. அணி குறித்து...
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கேசவ் மகாராஜ்...
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கேசவ் மகாராஜ்... படங்கள்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸி.க்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை 1-2 என இழந்தது.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தெ.ஆ. அணி முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தெ.ஆ. அணி 50 ஓவர்களில் 296/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அடுத்ததாக பேட் செய்த ஆஸி. அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸி. அணியில் தனியாளாகப் போராடிய மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தெ.ஆ. அணி சார்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து, ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

இதன் மூலம், ஒருநாள் தொடரில் 1-0 என தெ.ஆ. அணி முன்னிலை வகிக்கிறது.

Summary

South Africa won the first ODI against Australia by 89 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com