ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற லுங்கி இங்கிடி, “ஆஸி. பந்துவீச்சாளர்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.
2-0 என தெ.ஆ. தொடரை வென்றது. இரண்டாவது போட்டியில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த லுங்கி இங்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
84 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வென்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து இங்கிடி பேசியதாவது:
இரண்டாவதாக பந்துவீசுவதில் ஒர் அழகான விஷயம் இருக்கிறது. எந்த மாதிரி பந்துவீசினால் உபயோகமாக இருக்கும் என நாம் உட்கார்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நாதன் எல்லீஸின் திட்டங்களைப் பார்த்தேன். அவர் அதில் மிகவும் வெற்றிகரமாகவே இருந்தார். அதனால், அது எனக்கு சில திட்டங்களை அளித்தது.
சேவியர் பார்ட்லெட் புதிய பந்தில் ஸ்விங்கும் வேகமாக நகர்வதையும் பார்க்க முடிந்தது.
இதிலிருந்து எது உபயோகமாகும் என்ற ’ப்ளூபிரிண்ட்’ நமக்கு கிடைக்கிறது. அதை அப்படியே களத்தில் செயல்படுத்த வேண்டியதுதான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.