
ஆஸி. வீரர் கேமரூன் கிரீன் குறைவான பந்துகளில் சதமடித்த இரண்டாவது ஆஸி. வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதிரடியாக விளையாடிய கிரீன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 118* ரன்கள் எடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 431/ ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் (142), மிட்செல் மார்ஷ் (100), கேமரூன் கிரீன் (118*) சதமடித்து அசத்தினார்கள்.
ஆஸி. சார்பில் அதிவேகமாக சதமடித்தவர்கள்
40 பந்துகளில் சதம் - மேக்ஸ்வெல் - 2023
47 பந்துகளில் சதம் - கேமரூன் கிரீன் - 2025
51 பந்துகளில் சதம் - மேக்ஸ்வெல் - 2015
57 பந்துகளில் சதம் - ஜேம்ஸ் ஃபால்க்னர் - 2013
59 பந்துகளில் சதம் - டிராவிஸ் ஹெட் - 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.