
புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான சதத்தினை பதிவு செய்துள்ளார்.
சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் காயம் காரணமாக 80 சதவிகித போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.
தற்போது, காயம் குணமாகிய அவர் புச்சிபாபு தொடரில் விளையாடி வருகிறார்.
மகாராஷ்டிர அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தலாக 122 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இவரும் குல்கர்னியும் இணைந்து 220 ரன்கள் குவித்தார்கள்.
இறுதியில், ருதுராஜ் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணியில் நீண்ட நாள்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.