
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் நிகழ்த்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிகேஆர் (டிரின்போகோ நைட் ரைடர்ஸ்) அணிக்கு விளையாடி வருகிறார்.
முதலில் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் 20 ஓவர்களுக்கு 163 / 9 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டிகேஆர் 17.2 ஓவர்களில் 169/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் 43 பந்துகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இங்கிலாந்து வீரர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
1. கிறிஸ் கெயில் - 14, 562 ரன்கள்
2. கைரன் பொல்லார்டு - 14, 024 ரன்கள்
3. அலெக்ஸ் ஹேல்ஸ் - 14, 012 ரன்கள்
4. டேவிட் வார்னர் - 13, 595 ரன்கள்
5. சோயிப் மாலிக் - 13, 571 ரன்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.