
தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் தவினா பெர்ரின் அதிவேகமாக சதம் அடித்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆடவர் பிரிவிலும் சேர்த்து ஒரு பந்து அதிகமாக பிடித்து, இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியும் லண்டன் ஸ்பிரிட் வுமன் அணியும் மோதின.
இந்தப் போட்டியில், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை தவினா பெர்ரின் (18 வயது) 42 பந்தில் அதிரடியாக சதம் அடித்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்த அணி 214/5 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய லண்டன் அணி 172/9 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
மகளிர் பிரிவில் அதிவேகமாக சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையும் ஆடவர் பிரிவில் சேர்த்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 41 பந்துகளில் சதமடித்து ஹாரி புரூக் முதலிடத்தில் இருக்கிறார்.
தவினா பெர்ரின் இந்தப் போட்டியில் 15 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் சௌதர்ன் பிரேவ் வுமன்ஸ் அணியும் இந்திய நேரப்படி இன்று மாலை 6.45 மணிக்கு மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.