
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சேதேஷ்வர் புஜாராவைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி புஜாராவுக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: “நீங்கள் ஓய்வு முடிவை அறிவித்ததும், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தரப்பிலிருந்து கிரிக்கெட்டில் நீங்கள் நிகழ்த்திக்காட்டியுள்ள உங்களுடைய குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக பாராட்டு பொழிந்த வண்ணம் இருந்தது.
பெரும் கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள உங்களை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில், அதிக ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டும் எவ்வளவு அழகானது என்பதைக் குறித்து நீங்கள் நினவூட்டியிருந்தீர்கள்.
நெடுநேரம் பேட்டிங் செய்யும் உங்கள் பொறுமை அதுவும் கவனச்சிதறலின்றி, இந்திய பேட்டிங் தரவரிசைக்கு அச்சாணியாக இருந்தது.
பல்வேறு தொடர்களில் வெற்றி, பல சதங்கள், இரட்டை சதங்கள், பல சாதனைகள் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்தன. ஆனால் எந்த எண்களும் உங்களின் அமைதிக்கு, ரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் நீங்கள் கொடுத்த நிம்மதி உணர்வு, அதாவது அணியின் எதிர்காலம் பத்திரமான கைகளில் இருந்தது என்பதை குறித்தது” என்று பாராட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமது எக்ஸ் தள பக்கத்தில் புஜாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.