

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ஆடவர் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று (டிச.3) வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியவர்களின் அடிப்படையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 135 ரன்கள் குவித்து அசத்திய இந்திய வீரர் விராட் கோலி, ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேவேளையில், காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்காத இந்திய அணியின் பிரதான கேப்டன் ஷுப்மன் கில் இரு இடம் சரிந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அதே நிலையில் தொடர்கின்றனர்.
ஐசிசி ஒரு நாள் பேட்டர்களுக்கு தரவரிசைப் பட்டியல்
ரோஹித் சர்மா - 783 புள்ளிகள்
டேரில் மிட்செல் - 766 புள்ளிகள்
இப்ராஹிம் ஜத்ரன் - 764 புள்ளிகள்
விராட் கோலி - 751 புள்ளிகள்
ஷுப்மன் கில் - 738 புள்ளிகள்
பாபர் அசாம் - 722 புள்ளிகள்
ஹாரி டெக்டர் - 708 புள்ளிகள்
ஷாய் ஹோப் - 701 புள்ளிகள்
ஷ்ரேயஸ் ஐயர் - 693 புள்ளிகள்
சரித் அசலங்கா - 690 புள்ளிகள்
பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் குல்தீப் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் உயர்ந்து 641 புள்ளிகளுடன் 6 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் டி20 முத்தரப்பு தொடரில் விளையாடி வருகின்றன. அதில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.