

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. மூன்று போட்டிகளில் விராட் கோலி 135 ரன்கள், 102 ரன்கள் மற்றும் 65* ரன்கள் முறையே எடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 20-வது முறையாக தொடர் நாயகன் விருதினை வென்றுள்ளார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதினை வென்ற வீரர் சன்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 19 முறை ஆட்ட நாயகன் விருதுகள் வென்றிருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்து வந்தது. தற்போது சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதினை வென்றவர்கள்
விராட் கோலி - 20 முறை
சச்சின் டெண்டுல்கர் - 19 முறை
ஷகிப் அல் ஹசன் - 17 முறை
ஜாக் காலிஸ் - 14 முறை
சனத் ஜெயசூர்யா - 13 முறை
டேவிட் வார்னர் - 13 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.