3-வது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸி. வீரர் கொடுத்த அப்டேட்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் வீரர் பேசியுள்ளார்.
3-வது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸி. வீரர் கொடுத்த அப்டேட்!
படம் | AP
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து மார்னஸ் லபுஷேன் பேசியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடிலெய்டில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்பதில் அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இரண்டாவது போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத மூத்த சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

லபுஷேன் கொடுத்த அப்டேட்

5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், மூன்றாவது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பது அந்த அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அடிலெய்டு ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அணியைத் தேர்வு செய்வதற்கு அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்த மாதிரியான முடிவுகளையும் எடுப்பார்கள் என மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது. ஆனால், பிரிஸ்பேனில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் கிடைத்த அனுபவங்களை வைத்து, அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பிளேயிங் லெவனை தேர்வு செய்வார்கள். அடிலெய்டு ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சிறந்த பிளேயிங் லெவனை தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

An Australian player has spoken about what the playing eleven for the third Test against England will look like.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com