

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
ஹார்திக் பாண்டியா அதிரடி
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ஷுப்மன் கில் (4 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (12 ரன்கள்), அபிஷேக் சர்மா (17 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், திலக் வர்மா 26 ரன்களும், அக்ஷர் படேல் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின், ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஷிவம் துபே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டிய ஹார்திக் பாண்டியா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளையும், டோனோவன் ஃபெரைரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.