

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மகளிரணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30 வரை நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகள் விசாகப்பட்டினத்திலும், கடைசி மூன்று போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிசம்பர் 9) அறிவித்துள்ளது.
ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அறிமுக வீராங்கனைகளாக குணாலன் கமலினி மற்றும் வைஷ்ணவி சர்மா இருவரும் களமிறங்கவுள்ளனர்.
17 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான கமலினி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கௌர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌட், ரேணுகா சிங் தாக்குர், ரிச்சா கோஷ், கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.