

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் கேப்டனாக பாட் கம்மின்ஸ் பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்டில் விளையாடுகிறது.
முதல் இரண்டு போட்டியில் கம்மின்ஸ் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையேற்று 2-0 என ஆஸி. அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்டு அடிலெய்டில் வரும் டிச.17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார். ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்தே விலகியுள்ளார்.
நாதன் லயனும் இந்த டெஸ்ட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது போட்டிக்கான 15 பேர்கொண்ட ஆஸி. அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரண்டன் டக்கெட், கேமரூம் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மைக்கேல் நெசெர், மிட்செல் ஸ்டார், ஜேக் வெதரெல்ட், பியூ வெப்ஸ்டர்.
பிளேயிங் லெவனில் உஸ்மான் கவாஜா விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.