

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முதல்முறையாக ஐபிஎல் தொடரை தாண்டி வெளிநாட்டிலும் பயிற்சியாளராக அறிமுகமாகியுள்ளார்.
இங்கிலாந்தில் ஹண்டர்ஸ் கிரிக்கெட் தொடரில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.
ஆர்சிபி அணி இந்த சீசனில் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த அணியின் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போபட் கூறியதாவது:
லண்டன் ஸ்பிரிட் அணியில் டிகே (தினேஷ் கார்த்திக்) வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் அசலாக சிந்திக்கக் கூடியவர். டி20 கிரிக்கெட்டில் அவரது மிகப்பெரிய அனுபவம் எங்களுக்கு விலைமதிப்பற்றது.
அவருடன் வேலை செய்வது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். அவரின் சந்தோஷமான ஆற்றல் அனைவரிடமும் தொற்றிக் கொள்ளும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.