

அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை தொடங்கியது. இதில், ஆரம்ப விலை ரூ. 100 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படக்கூடிய ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2026) இந்தியாவிலும் பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது.
2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி 7, தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் 20 அணிகள் மோதுகின்றன.
உலகக்கோப்பை தொடர் மொத்தம் 8 திடல்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 20 அணிகள் போட்டியிடும் இந்தத் தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவில் அகமதாபாத், சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட திடல்களிலும், இலங்கையில் கொழும்பு பிரேமதாசா, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய திடல்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று (டிச.11) மாலை 6.15க்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை ஐசிசியின் அதிகாரபூர்வ https://tickets.cricketworldcup.com/ தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
போட்டிக்கான ஆரம்ப விலை ரூ. 100 முதல் தொடங்கியுள்ளது. சிறிய அணிகள் விளையாடும் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையிலும், டி20 உலகக் கோப்பை தொடரைக் கண்டுகளிக்கும் வகையில் மலிவு விலையில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் திடலில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான போட்டிகள் உள்பட 7 போட்டிகள் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.