

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 278 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றியைத் தட்டிப்பறித்து சமனில் முடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-அவுட்
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று(புதன்கிழமை) தொடங்கிய இந்த டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 205 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷாய் ஹோப் 47 ரன்களும், கேம்ப்பெல் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் எடுத்தனர். அபாரமாகப் பந்து வீசிய டிக்னர் 4 விக்கெட்டுகளும் மிட்செல் ரே 3 விக்கெட்டுகளும் ஜேக்கப் டஃபி, கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 75 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் சேர்த்தது.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் லாதம் 11 ரன்களில் வெளியேற அடுத்துவந்த வில்லியம்சனுடன் கைகோர்த்த தொடக்க ஆட்டக்காரர் கான்வே நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். கான்வே 60 ரன்களும், வில்லியம்சன் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்துவந்த அதிரடி ஆட்டக்காரர் ரவீந்திரா 5 ரன்களில் ஏமாற்றமளிக்க, டேரில் மிட்செல் 25 ரன்களும், விக்கெட் கீப்பர் மிட்செல் ஹே 61 ரன்களும் எடுத்து அசத்தினார். பின் வரிசை ஆட்டக்காரர்களும் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
க்ளென் பிலிப்ஸ் 18 ரன்களும், ஜேக்கப் டஃப்பி 11 ரன்களும், மைக்கேல் ரே 13 ரன்களும் எடுத்தனர். ஸாகரி ஃபோல்க்ஸ் 23 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் டிக்னெர் முதல் இன்னிங்ஸின் போது தோள்பட்டை காயத்தால் போட்டியில் இருந்து விலகியதால் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால், 74.4 ஓவர்களில் 278 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில், ஆண்டர்சன் பிலிப் 3 விக்கெட்டுகளும், கெமர் ரோச் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர், 73 ரன்கள் முன்னிலையுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னின்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பு மேற்கிந்தியத் தீவுகள் அணி 32 ரன்கள் எடுத்துள்ளது. பிரண்டன் கிங் 15 ரன்களும், காவெம் ஹாட்ஜ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.