

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியுடனான இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட விருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்கான நிகழ்ச்சி நிரல், டிக்கெட் விவரம் உள்ளிட்டவைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் கிரிக்கெட்டின் வலையில் சிக்கியிருந்தாலும் கால்பந்துக்கென மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
இந்திய கால்பந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக உலகக்கோப்பையை வென்ற ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ‘கோட் இந்தியா டூர்’ - G.O.A.T. India Tour பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் பயணத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இந்தச் சுற்றுப்பயணம் டிச. 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்துக்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
மெஸ்ஸியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.4,500-ல் இருந்து துவங்குகிறது. அதேவேளையில், மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான கட்டணம் ரூ. 8,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மியாமியில் வசிக்கும் மெஸ்ஸி வெள்ளிக்கிழமை அங்கிருந்து புறப்பட்டு, 1.30 மணிக்கு கொல்கத்தா வருகிறார். அதைத்தொடர்ந்து சனிக்கிழமை(டிச.13) காலை ரசிகர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
அங்கு இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு அன்று மதியம் 2 மணிக்கு ஹைதராபாத் செல்கிறார்.
டிசம்பர் 13, ஹைதராபாத்தில் 7 பேர் கொண்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அணியினருடன் நட்புறவு போட்டியிலும் மெஸ்ஸி கலந்து கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து டிச.14 ஆம் தேதி மும்பை வான்கடேவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், டிச. 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.