

ஆஸி. யு-19 உலகக் கோப்பையில் இந்திய வம்சாவளியினர் இரண்டு பேர் இடம்பிடித்து அசத்தியுள்ளார்கள்.
யு-19 உலகக் கோப்பை போட்டிகள் வரும் ஜன.15 முதல் பிப்.6ஆம் தேதி வரை நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கின்றன.
யு-19 உலகக் கோப்பைக்கான 15 பேர்கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளார்கள்.
ஆர்யன் இடதுகை பேட்டர், இடதுகை சுழல்பந்து வீச்சாளராகவும் ஜேம்ஸ் வலதுகை மிதமான பந்துவீசும் ஆல்-ரவுண்டர் திறமைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருவருமே யூத் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு எதிராக கடந்த செப்டம்பரில் விளையாடினார்கள்.
இந்திய வம்சாவளி மட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த இருவரும் (நடேன் கூரி, நிதீஷ் சாமுவேல்) சீனாவைச் சேர்ந்த அலெக்ஸ் லீ யங் என்ற வீரரும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு யு-19 சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியை ஆலிவர் பீக் கேப்டனாக வழிநடத்துக்கிறார்.
இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் டிம் நீல்சன் கூறியதாவது:
ஐசிசி யு-19 உலகக் கோப்பைக்காம்ன வலுவான, சமநிலைகொண்ட ஆஸி. அணியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அணியை முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் தொடரை வெல்லும் முனைப்பில் தேர்ந்தெடுத்துள்ளோம்.
யு-19 இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்துள்ளோம். தங்கள் திறமைகளைக் காண்பித்து உலகின் சிறந்த வீரர்கள் என அவர்கள் நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஆஸி. அணி குரூப் ஏ பிரிவில் அயர்லாந்து, ஜப்பான், இலங்கை அணியுடன் இருக்கிறது.
ஆஸி. யு-19 அணி: ஆலிவர் பீக், கேசி பார்டன், நாடன் கூரே, ஜேடன் டிரேப்பர், பென் கார்டன், ஸ்டீவன் ஹோகன், தாமஸ் ஹோகன், ஜான் ஜேம்ஸ், சார்லஸ் லாக்மண்ட், வில் மலாஜ்சுக், நிதேஷ் சாமுவேல், ஹேடன் ஷில்லர், ஆர்யன் ஷர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.