

தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான தயாரிப்பில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ், பிரிடோரியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைப் பந்து போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை கேசவ் மகாராஜ் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ், தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அறிமுக சீசனில் இரண்டாமிடம் பிடித்த பிரிடோரியா கேபிடல்ஸ் அணி, முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் எதிர்வரும் நான்காவது சீசனில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.