

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று (டிசம்பர் 14) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அக்ஷர் படேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜஸ்பிரித் பும்ராவும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
பிளேயிங் லெவனில் ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.