

ஷுப்மன் கில்லின் ஃபார்மை விட கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் அணிக்கு மிகுந்த கவலையளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில் ஷுப்மன் கில்லின் ஃபார்மைக் காட்டிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் அணிக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில்லின் ஃபார்மைக் காட்டிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவதற்கு நிறைய தெரிவுகள் இருக்கின்றன. ஆனால், கேப்டன் பொறுப்பை மாற்ற முடியாது எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த ஆண்டு 19 டி20 போட்டிகளில் விளையாடி 201 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த ஆண்டு அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த ஆண்டு இந்திய அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில், 263 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு அவரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.