

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடக்க வீரர் ஷுப்மன் கில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் நிலையில், அணியில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட்டை 2-0 என வென்றது. ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என வென்றது.
தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்றிரவு நடைபெற இருக்கிறது. தொடரில் முன்னிலை வகிக்க இந்தப் போட்டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தொடர்ச்சியாக 17 போட்டிகளில் அரைசதம்கூட அடிக்காத ஷுப்மன் கில்லுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.