

ஆஷஸ் தொடரில் அடிலெய்ட் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைத் தக்கவைக்கும் முன்னப்பில் இருக்கிறது.
அதேநேரத்தில் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆஷஸ் கோப்பையை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் முன்னப்பில் இருக்கும் இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் வென்று தொடரை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை (டிச.17) இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்குத் துவங்குகிறது.
இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (டிச.16) காலை அறிவித்தது.
காயத்தால் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியை வழிநடத்துகிறார். இரண்டாவது டெஸ்டில் பங்கேற்காத ஆஃப்-ஸ்பின்னர் நாதன் லயன் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதேநேரத்தில், கடைசிப் போட்டியின் இரண்டாவது இன்னின்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜொலித்த ஆல்ரவுண்டர் மைக்கேல் நெசர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாகெட் ஆகியோர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டனர்.
முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மீண்டும் அணியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்
ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.