

ஐபிஎல் மினி ஏலத்தில் அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாறு படைத்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முக்கியமான வீரர்கள் பலரது பெயர் வந்தபோதும், அவர்களை ஏலமெடுக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டாத சிஎஸ்கே அணி இரண்டு அன்கேப்டு (சர்வதேசப் போட்டிகளில் விளையாட வீரர்) இளம் வீரர்களை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் கார்த்திக் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தலா ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்தது. இதன் மூலம், சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன அன்கேப்டு வீரர்கள் என்ற சாதனையை இணைந்து படைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.