தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குயிண்டன் டி காக் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான குயிண்டன் டி காக்கை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்க அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.