

ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டிப் போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான லியம் லிவிங்ஸ்டனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆல்ரவுண்டர்களுக்கான முதல் சுற்றில் ஏலம்போகாத லியம் லிவிங்ஸ்டன், ஏலத்தின் பிற்பகுதியில் சன்ரைசர்ஸ் அணியால் ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.