

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26 :
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட்டில் டாஸை இழந்து பந்துவீசியது.
இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.
டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 326/8 ரன்கள் குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82 ரன்கள் குவித்துள்ளார்கள்.
முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் திடலுக்கு 56, 298 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். இந்தத் திடலில் இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.