

ஐபிஎல் மினி ஏலம்: துபையில் நடந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி 19 வயது இளம் வீரரான கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த ஏலம் முடிந்தும் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம்போன முதல் அன்கேப்ட் (இந்திய அணிக்கு விளையாடாத வீரர்) வீரராக கார்த்திக் சர்மா சாதனை படைத்துள்ளார்.
ஏலம் முடிந்தும் அழுதுகொண்டிருந்தேன்...
இது குறித்து அவர் பேசியதாவது:
ஏலம் தொடங்கும்போது, ஒருவேளை நான் தேர்வாகாமல் போகலாம் என்று மிகவும் பயத்தில் இருந்தேன்.
ஆனால், ஏலத்தில் தொகை கூடிக்கொண்டு செல்லும்போதே நான் அழுக தொடங்கினேன். ஏலம் முடிந்தும் நான் அழுதுவதை நிறுத்தவில்லை.
மகிழ்ச்சியாலும் உணர்ச்சிகளாலும் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். நிஜமாகவே, இதையெல்லாம் எப்படி வார்த்தைகளால் சொல்வதெனப் புரியவில்லை.
தோனியுடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். எனது குடும்பம், நண்பர்களுக்கு நன்றி எனக் கூறினார்.
19 வயதில் ரூ.14 கோடி
ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்டரான கார்த்திக் சர்மாவை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டியிட்டன.
மும்பை இந்தியன்ஸ் தொடங்கிய இந்த வீரரை எடுக்க ஏலத்தில் லக்னௌவும் கேகேஆர் அணியும் இணைந்தன.
3 கோடிக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. 13 கோடிக்குச் சென்றபோது கேகேஆர் விலக சன்ரைசர்ஸ் அணி நுழைந்தது.
பிறகு, சிஎஸ்கே ரூ.14.20 கோடியில் கார்த்திக் சர்மாவை வாங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.