சிஎஸ்கே யாரையெல்லாம் எடுக்க திட்டமிட்டிருந்தது? வெளியானது போஸ்டர்கள், விடியோக்கள்!

மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க விரும்பியும் முடியாமல்போன வீரர்கள் குறித்து...
The poster and video clips released by CSK.
சிஎஸ்கே வெளியிட்ட போஸ்டர், விடியோ காட்சிகள். படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே
Updated on
1 min read

ஐபிஎல் மினி ஏலம் 2025 : சிஎஸ்கே அணி ஐபிஎல் மினி ஏலத்தில் யாரையெல்லாம் எடுக்க திட்டமிருந்தது என்பதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏலத்திற்கு முன்னதாகவே சிஎஸ்கே எடிட் செய்து பயன்படுத்த முடியாமல்போன போஸ்டர்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே அணி துபையில் நடைபெற்ற ஏலத்தில் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்திவ் ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சஹார், ஜாக் ஃபோக்ஸ் ஆகியோரை எடுத்தது.

இந்நிலையில், மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க விரும்பியும் முடியாமல்போன வீரர்கள் குறித்த போஸ்டர்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.

இனிமேல் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி பதிரானா, ரச்சின் ரவீந்திரா, கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர், லியாம் லிவிஸ்டன், ஆகியோரின் புகைப்படங்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.

Summary

IPL Mini Auction 2025: The CSK team has released the list of players they planned to acquire in the IPL mini-auction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com