

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26: ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்து வீரர்களை விட அதிக ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
வேகப் பந்துவீச்சாளரான ஸ்டார்க் அதிக ரன்கள் குவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 0-2 என தோல்வியுற்றுள்ளது.
மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 371க்கு ஆல் அவுட் ஆக, இங்கிலாந்து 213/8 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவரும் மிட்செல் ஸ்டார்க் தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் ஸ்டார்கை விட அதிக ரன்கள் எடுத்தவர்களாக டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லபுஷேன், ஜோ ரூட் இருக்கிறார்கள்.
இதில் இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் ( 5 இன்னிங்ஸில் 180 ரன்கள்) ஒருவர் மட்டுமே ஸ்டார்க்-ஐ விட அதிகமான ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்து வீரர்களின் ரன்கள் ஒப்பீடு
மிட்செல் ஸ்டார்க் - 143 ரன்கள் ( 3 இன்னிங்ஸ்)
ஹாரி புரூக் - 143 ரன்கள் ( 5 இன்னிங்ஸ்)
ஜாக் கிராவ்லி - 129 ரன்கள் ( 5 இன்னிங்ஸ்)
பென் ஸ்டோக்ஸ் - 122 ரன்கள் ( 5 இன்னிங்ஸ்)
ஆலி போப் -108 ரன்கள் ( 5 இன்னிங்ஸ்)
பென் டக்கெட் - 93 ரன்கள் ( 5 இன்னிங்ஸ்)
ஜேமி ஸ்மித் - 74 ரன்கள் ( 5 இன்னிங்ஸ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.