

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26: ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்களில் க்ளென் மெக்ராத்தை முந்தி இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலிய அணியில் முதலிடத்தில் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அடிலெய்டில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆஸி. அணி 371 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் தற்போது 168/8 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் நாதன் லயன் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இதன்மூலம் ஆஸி. டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த க்ளென் மெக்ராத் நாற்காலியை தூக்கி எறியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இவர் ஜாலியாக கோபம் அடைந்ததுபோல செய்த காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸி.
1. ஷேன் வார்னே - 708
2. நாதன் லயன் - 564
3. க்ளென் மெக்ராத் - 563
4. மிட்செல் ஸ்டார்க் - 418
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.