

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2025-26: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
தனது பாணியில் பவுண்டரி அடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஒரே திடலில் தொடர்ச்சியாக 4 முறை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். 99 ரன்களில் இருக்கும்போது அவருக்கு கேட்ச் தவறவிடப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. 371- க்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 286 க்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸி. அணி 230/4 ரன்கள் எடுத்துள்ளது.
களத்தில் டிராவிஸ் ஹெட் (122), அலெக்ஸ் கேரி (34) விளையாடி வருகிறார்கள்.
தொடர்ச்சியாக ஒரே திடலில் சதம் அடித்தவர்கள்
டான் பிராட்மேன் - எம்சிஜி - 1928-31- 4 முறை
டான் பிராட்மேன் - ஹெடிங்லே - 1930- 48 - 4 முறை
மைக்கேல் கிளார்க் - அடிலெய்டு - 2012- 14 - 4 முறை
ஸ்டீவ் ஸ்மித் - எம்சிஜி - 2014-17 - 4 முறை
டிராவிஸ் ஹெட் அடிலெய்டு - 2022-25 - 4 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.