

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பிபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை அறிவித்துள்ளார்.
சிட்னி சிக்ஸர் அணிக்காக சமீபத்தில் அவர் ஒப்பந்தமானது கவனிக்கத்தக்கது.
சிட்னி தண்டர் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிட்னி சிக்ஸர் அணி 20 ஓவர்கள் முடிவில் 198/5 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் தொடக்க வீரரான பாபர் அசாம் 42 பந்தில் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த அணியில், அதிகபட்சமாக ஜோஷ் பிலிப்பி 96 ரன்கள் குவித்து அசத்தினார்.
சிட்னி தண்டர் அணி 11 ஓவர்களில் 93/4 ரன்கள் எடுத்துள்ளது. சாம் பில்லிங்ஸ் அதிரடியாக அரைசதம் அடித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்த்த சாம் கான்ஸ்டாஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.