

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை இளம் வீரர் திலக் வர்மா முறியடித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாதில் நேற்று (டிசம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். திலக் வர்மா 73 ரன்களும், ஹார்திக் பாண்டியா 63 ரன்களும் எடுத்தனர். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரோஹித் சர்மாவின் சாதனை முறியடிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 73 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா தன்வசம் வைத்திருந்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 429 ரன்கள் எடுத்துள்ளார். அவரது இந்த சாதனையை திலக் வர்மா தற்போது முறியடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இதுவரை 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 496 ரன்கள் எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய வீரர்கள்
திலக் வர்மா - 496 ரன்கள் (10 இன்னிங்ஸ்களில்)
ரோஹித் சர்மா - 429 ரன்கள் (17 இன்னிங்ஸ்களில்)
சூர்யகுமார் யாதவ் - 406 ரன்கள் (14 இன்னிங்ஸ்களில்)
விராட் கோலி - 394 ரன்கள் (13 இன்னிங்ஸ்களில்)
ஹார்திக் பாண்டியா - 373 ரன்கள் (15 இன்னிங்ஸ்களில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.