

இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் படையப்பா பாடல் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-1 என வென்று அசத்தியது.
இந்தத் தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசினார். தெ.ஆ. உடனான 4 டி20 போட்டிகளில் மொத்தம் 10 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
கடைசி டி20 போட்டியில் மட்டுமே 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 231/5 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 201/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிரடியாக பேட்டிங் செய்த ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வானார்.
டி20 தரவரிசையில் உச்சநிலையில் இருக்கும் வருண் சக்கரவர்த்தி படையப்பா பாடலைப் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் படையப்பா திரைப்படம் மறுவெளியீடாகி மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் மறுவெளியீடான படையப்பா வசூலிலும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்கரவர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.