

அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
2 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியை 3-0 என வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அலெக்ஸ் கேரி 106 மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 72 ரன்களும் எடுத்தார்.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 கேட்ச்சுகள் மற்றும் 1 ஸ்டம்பிங் செய்தும் அசத்தினார்.
இந்த அபாரமான செயல்பாடுகளால் அலெக்ஸ் கேரிக்கு ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். அடிலெய்டு அவருக்கு சொந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது.
சதம் மற்றும் 7 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரராக அலெக்ஸ் கேரி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2010/11 தொடரில் மாட் பிரியர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.