

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் மது குடித்தாக எழுந்த புகாரை விசாரிப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் ராப் கீ தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
குடித்துவிட்டு கும்மாளம் அடித்த இங்கிலாந்து அணி?
வெறுமனே 11 நாள்களில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்தில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட், மூன்றாவது டெஸ்ட்டுக்கு இடையே இங்கிலாந்து வீரர்கள் பிரிஸ்பேனின் வடக்கில் இருக்கும் நூஸாவில் இருக்கும் உல்லாசப் போக்கிடத்திற்குச் சென்றுள்ளார்கள்.
நீண்ட தொடரான இதில் வீரர்களை மகிழ்விக்க இப்படி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ கூறியதாவது:
குடிப்பது பிரச்னை அல்ல... ஆனால்,
இடைவேளை எடுத்துக்கொள்வது பிரச்னை இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்திருப்பது தெரியவந்தால் நான் மகிழ்ச்சி அடையமாட்டேன்.
நமது வீரர்கலை வெளியே சென்று அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது நாங்கள் அது குறித்து பார்க்க வேண்டியிருக்கிறது.
எந்தக் கட்டத்திலும் ஒரு தேசிய அணி அளவுக்கு அதிகமாக ஆல்கஹாலை குடிப்பது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
இதுவரை நான் கேள்விப்பட்டதெல்லாம், அவர்கள் அங்கு ஒழுங்காகவே நடந்துகொண்டுள்ளார்கள்.
ஏற்கெனவே ஒருமுறை எச்சரித்திருக்க வேண்டும்...
அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய எங்களுக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை அவர்கள் அங்கே மதிய உணவு, இரவு உணவு சாப்பிட்டுள்ளார்கள், காலம்தாமதித்து செல்லவில்லை, அனைவருமே குடித்திருக்கிறார்கள். அது எனக்குப் பிரச்னை இல்லை.
அது அளவுக்கு மீறிச் சென்றிருந்தால் அதுதான் பிரச்னை என நான் நினைக்கிறேன்.
நியூசிலாந்து தொடரிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதற்கு நேரடியான எச்சரிக்கையாக இல்லாவிட்டாலும் மறைமுகமான எச்சரிக்கைக்கு ஏற்றதே.
உண்மையில் அதுதான் எங்களுக்கு விழிப்புணர்வுக்கான ஒரு சமிக்கையாக இருந்துள்ளது. இரவு உணவின்போது ஒரு கிளாஸ் வைன் பிரச்னை இல்லை. ஆனால், அதற்கு மேல் இருந்தால் அது முட்டாள்தனமானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.