

ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் (டிசம்பர் 26) முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
காயம் காரணமாக விலகியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சருக்குப் பதிலாக நான்காவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆலி போப்புக்குப் பதிலாக ஜேக்கோப் பெத்தேல் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்
ஸாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கோப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடான் கார்ஸ், ஜோஷ் டங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.