

நான்காவது ஆஷஸ் போட்டிக்கான 12 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் சுழல்பந்துவீச்சாளர் இல்லாமலே வேகப் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளது.
நாதன் லயன் காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக டாட் மர்ஃபி அணியில் இணைந்துள்ளார்.
இருப்பினும் அவர் எம்சிஜியில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
”டாஸ் சுண்டுவதற்கு முன்பாக பிளேயிங் லெவனை அறிவிப்போம். இந்தத் திடல் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்” என ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மன கவாஜா, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மைக்கேல் நசெர், மிட்செல் ஸ்டார்க், ஜாய் ரிச்சர்ட்சன், பிரெண்டன் டக்கெட், ஸ்காட் போலண்ட்.
இங்கிலாந்து அணி: ஜாக் கிராவ்லி, ஜாகோப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்ஸன், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.