

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 28) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஹர்லீன் தியோல் மற்றும் அருந்ததி ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளனர். கிராந்தி கௌடுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், வெற்றிநடையை தொடரும் முனைப்பில் இந்திய அணியும், தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.