

இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா அதிரடி
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்திய அணி 162 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 46 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின் களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியைத் தொடர்ந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.