இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து சர்வதேச டி20யில் 150 போட்டிகளில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்த போட்டி இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து விளையாடும் 150-வது சர்வதேச டி20 போட்டியாகும். மேலும், இலங்கை அணிக்காக 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதுவரை இலங்கை அணிக்காக டி20 போட்டிகளில் சமாரி அத்தப்பத்து 3507 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 25.23 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 109.97 ஆகவும் உள்ளது. அவர் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடித்துள்ளார்.
35 வயதாகும் சமாரி அத்தப்பத்து சர்வதேச டி20 போட்டிகளில் 69 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.