4-வது டி20: திருவனந்தபுரத்தில் பௌண்டரி மழை! இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

4-வது டி20: அத்தப்பத்து அரைசதம் வீண்! இலங்கையை வீழ்த்தியது இந்தியா...
வைஷ்ணவி சர்மாவுடன் வீராங்கனைகள்
வைஷ்ணவி சர்மாவுடன் வீராங்கனைகள்PTI
Updated on
1 min read

இலங்கையை வீழ்த்தியது இந்தியா :

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். இதனால், இந்திய அணி 162 ரன்களிதான் முதல் விக்கெட்டினை இழந்தது. இருதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி நிர்ணயித்த 222 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்கை விரட்ட தீவிரமாகப் போராடிய இலங்கை வீராங்கனைகளால் 191 ரன்களே எடுக்க முடிந்ததால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திருவனந்தபுரத்தில் பௌண்டரி மழை :

இலங்கை அணியில் தமது 150-ஆவது சர்வதேச டி20 ஆட்டத்தில் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து 37 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். அதில் 3 சிக்ஸர், 3 பௌண்டரிகள் அடங்கும். தொடக்க வீராங்கனை ஹசினி பெரேரா 7 பௌண்டரிகளுடன் 33 ரன்கள் திரட்டினார். அந்த வகையில் இலங்கை அணி மொத்தம் 25 பௌண்டரிகளை விளாசியது.

இந்திய அணி மொத்தம் 36 பௌண்டரிகளை விளாசியது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 61 பௌண்டரிகளை இரு அணிகளும் விளாசின.

வைஷ்ணவி சர்மாவுடன் வீராங்கனைகள்
சொல்லப் போனால்... உன்னாவ்... நீதிதேவன் மயக்கம்?
Summary

India Women Won by 30 Runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com