

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ளது.
1996 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தப் பட்டியலில் பிரட் லீ 60-ஆவது நபராக இணைந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, “நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர், கட்டுப்பாடற்ற இளைஞனாக பந்துவீசுவார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உண்மையான எண்டர்டெயினராக இருக்கும் பிரட் லீ கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஹால் ஆஃப் பேமில் இணைகிறார்” எனக் கூறியுள்ளது.
இந்தப் பட்டியலில் ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன், கீத் மில்லர், டென்னிஸ் லில்லி, தி சேப்பல் சகோதரர்கள் -இயன் மற்றும் கிரெக் சேப்பல், ஷேன் வார்னே, ஸ்டீவ் வாக், மைக்கேல் ஹஸி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.
ஆஸி. அணியில் 76 டெஸ்ட்டில் 310 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில் 10 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
221 ஒருநாள் போட்டிகளில் 380 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 14 முறை 4 விக்கெட்டுகளும் 9 முறை 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
25 டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை எடித்துள்ளார். மொத்தமாக 322 போட்டிகளில் 718 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
பேட்டிங்கில் 2,728 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 8 முறை அரைசதம் அடித்திருக்கிறார்.
அவர் 2003 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி 2006, 2009-ல் வெற்றிபெற்ற அணியில் விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.