இன்ஸமாம் உல் ஹக்கின் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் விளாசி பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சாதனை படைத்துள்ளார்.
Pakistan team captain Shan Masood
பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் (கோப்புப் படம்)
Updated on
1 min read

முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் விளாசி பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சாதனை படைத்துள்ளார்.

பிரெசிடண்ட்ஸ் கோப்பை தொடரில் சூய் நார்தன் கேஸ் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத், 177 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இன்ஸமாம் உல் ஹக் 188 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார்.

இந்த நிலையில், அதிவேக இரட்டைச் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் என்ற இன்ஸ்மாம் உல் ஹக்கின் இந்த சாதனையை டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் ஷான் மசூத் முதல் நாளில் 185 பந்துகளில் 212 ரன்கள் எடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் சிவப்பு பந்துப் போட்டிகளில் அதிவேக இரட்டைச் சதம் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தன்வசம் வைத்துள்ளார். அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 182 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan captain Shan Masood has set a record by scoring the fastest double century in first-class cricket.

Pakistan team captain Shan Masood
ஆஷஸ் கடைசி டெஸ்ட்டிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com