

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 30) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மிருதி மந்தனா மற்றும் ரேணுகா சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கமலினி அறிமுக வீராங்கனையாக களமிறங்குகிறார். ஸ்நே ராணா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.