

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஓமன் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 30) அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஓமன் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை ஜதீந்தர் சிங் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். ஆசிய கோப்பை டி20 தொடரில் ஓமன் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட 43 வயதாகும் ஆமிர் கலீம் அணியில் இடம்பெறவில்லை.
டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்
ஜதீந்தர் சிங் (கேப்டன்), விநாயக் சுக்லா (துணைக் கேப்டன்), முகமது நதீம், ஷகீல் அகமது, ஹம்மாத் மிர்ஸா, வாசிம் அலி, கரண் சோனாவாலே, ஃபைசல் ஷா, நதீம் கான், சூஃப்யான் மெஹ்முத், ஜே ஒதேத்ரா, ஷஃபீக் ஜேன், ஆஷிஷ் ஒதேத்ரா, ஜித்தன் ரமணந்தி, ஹஸ்னைன் அலி ஷா.
ஓமன் அணி குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஓமன் அணி ஜிம்பாப்வேவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.