பாலிவுட் நடிகைக்குத் தொல்லை? சர்ச்சையில் இந்திய கேப்டன்!

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் மீதான குற்றச்சாட்டு குறித்து...
Khushi Mukherjee, suryakumar yadav
குஷி முகர்ஜி, சூர்யகுமார் யாதவ். படங்கள்: இன்ஸ்டா / குஷி முகர்ஜி, சூர்யகுமார் யாதவ்.
Updated on
1 min read

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு அதிகமாக குறுஞ்செய்திகளை அனுப்புவார் எனக் கூறி பாலிவுட் நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது ஃபார்மில் இல்லாமல் இருக்கும் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது ஃபேஷன் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:

நான் எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. பல வீரர்கள் என்னிடம் பேசுகிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு அதிகமாகக் குறுஞ்செய்திகளை அனுப்புவார்.

தற்போது, அதிகமாகப் பேசுவதில்லை. என்னுடைய பெயர் இந்த மாதிரியான எதிலும் சேர்வதில் விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், “எங்களுக்குள் ரொமான்டிக்கான உறவு இல்லை” என நடிகை கூறியதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் தனது மனைவியுடன் சூர்யகுமார் யாதவ் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஃபார்மில் இல்லாத இவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு அவர் மீது மேலும் பழுவைக் கூட்டுவதாகவே இருக்கிறது.

இந்திய அணி நடப்பு டி20 சாம்பியனாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. 

Summary

A Bollywood actress has created a stir by claiming that Indian T20 team captain Suryakumar Yadav sends her a lot of text messages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com