
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
காலேவில் தொடங்கும் 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செய டீ செல்வா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பதும் நிசாங்கா விக்கெட்டினை நாதன் லயன் வீழ்த்தினார்.
தற்போது, திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால் விளையாடி வருகிறார்கள். 18 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 68/1 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியுடன் திமுத் கருணரத்வே ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணியில் 21 வயதாகும் கூப்பர் கன்னோலி அறிமுகமாகியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.