இலங்கை வீரரின் கடைசி போட்டிக்கு மரியாதை செலுத்திய ஆஸி. அணி.
இலங்கை வீரரின் கடைசி போட்டிக்கு மரியாதை செலுத்திய ஆஸி. அணி.படங்கள்: ஏபி, 7கிரிக்கெட்

7,222 ரன்களுடன் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்..! மரியாதை செய்த ஆஸி. அணி!

இலங்கை வீரர் திமுத் கருணரத்னே தனது கடைசி டெஸ்ட்டில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Published on

இலங்கை வீரர் திமுத் கருணரத்னே தனது கடைசி டெஸ்ட்டில் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. டெஸ்ட்டில் மொத்தமாக 7,222 ரன்களுடன் ஓய்வுபெற்றுள்ளார்.

16 சதங்கள், 39 அரைசதங்கள் அடித்துள்ள கருணரத்னே கிட்டதட்ட 40 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருணரத்னே ”இலங்கை அணி ஓராண்டில் மிகவும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், 10,000 ரன்கள் குவிக்கும் இலக்கு மிகவும் தொலை தூரத்தில் இருக்கிறது. இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே நான் சாதனையாக உணர்கிறேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. ஆஸி. 414 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.

2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 52 ஓவர்கள் முடிவில் 178/5 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com